காலத்துக்கு ஏற்ற மாற்றம், சட்டத்தின் ஆட்சி, தனி நபர் சுதந்திரம்

காலத்துக்கு ஏற்ற மாற்றம்

எத்தனையோ விசயங்களில் இன்று அறிவியல் தொழில்நுட்பங்களால் மாற்றங்கள் வந்துவிட்டன. நூறு ஆண்டுகளுக்கு முன்னர் மாட்டு வண்டியில் போய்க் கொண்டு இருந்தோம். இன்று மோட்டார் வாகனங்களில் வானூர்திகளில் பயணம் செய்கிறோம். பனையோலைகளில் எழுத்தாணி கொண்டு எழுதிக் கொண்டிருந்தார்கள். அதை உலகளாவி பரப்ப படாத பாடு பட்டார்கள். இன்று முகநூலில் எழுதினால் மறு விநாடி உலகளாவி தகவல் பறக்கிறது. மன்னராட்சி கூட மாறி மக்களாட்சி வந்து விட்டது.

மாற்ற முடியாத காலத்துக்கு ஏற்ப மாறாத ஒரே நூல் ஒரே விதி எனக் கொண்டிருந்தால் கிறிஸ்தவ இஸ்லாமிய சமூகங்களைப் போல் நாமும் தேக்கம் அடைந்து விடுவோம். இனியும் சாஸ்திரங்கள் சம்பிரதாயங்கள் மதங்கள் என ஒன்றையே பிடித்து் தொங்கிக் கொண்டிருக்கக் கூடாது.

காலத்துக்கு ஏற்ற படி பொது சிவில் சட்டத்தினை வகுத்துக்கொண்டு மேற்கொண்டு வரும் காலங்களில் நிகழ்பனவற்றுக்கு ஏற்றவாறு அதில் மாறுதல்கள் செய்து கொண்டே வரவேண்டும். மேற்கொண்டு அவரவர் மத நூல்களை எல்லாம் தூக்கி போட்டுவிட்டு அறிவியல் கண்டுபிடிப்புகள் அறிஞர்களின் ஆய்வு முடிவுகளை ஆதாரமாக வைத்து வாழ்க்கை விதிகளை அமைத்துக் கொள்வதே சரியாக இருக்கும்.

அதுவே முற்போக்காக அமையும். மற்றவை எல்லாம் பிற்போக்குத்தனம்.

சட்டத்தின் ஆட்சி – தன்னிச்சையான வாழ்க்கை – தனி நபர் சுதந்திரம்

பொது சிவில் சட்டம் இல்லாது போனால் சட்டத்தின் ஆட்சி நடக்காது போய்விடும். கட்டப் பஞ்சாயத்து பெருகிவிடும். தடி எடுத்தவனல்லாம் தண்டல்காரன் ஆகிவிடுவான். இவை அனைத்தும் சட்டத்திற்கு புறம்பானவை. அதோடு 18 வயது ஆன எந்த ஆணும் பெண்ணும் நாட்டின் தலைவிதியையே தீர்மானிக்கும் உரிமை பெறுகிறார்கள்.

அவர்களே தன்னிச்சையாக தங்கள் வாழ்க்கை முறைகளை மேற்கொள்ள குறுக்கீடாக சாதிகளும் சடங்குகளும் மதங்களும் முட்டுக்கட்டைகளை போடுகின்றன. தனி நபர் சுதந்திரத்தை உறுதி செய்து தன்னிச்சையான வாழ்க்கையை மேற்கொள்ள வழி வகை செய்யும் விதமாக பொது சிவில் சட்டம் கொண்டு வரப்பட வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *