இந்தியாவின் சிறந்த வழக்குகளின் அடிப்படையில்
சீர்திருத்தம் போன்றவை மேற்கத்திய நாடுகளில் அவற்றினுள் ஏற்பட்ட சிக்கல்களால் நிகழ்ந்தவை. அவை இந்தியாவிற்கு தேவையில்லை. காலாகாலமாக இந்தியாவில் பல சிறந்த வாழ்க்கை முறைகள் நிலவி வந்துள்ளன. எனவே இந்திய வாழ்வியல் கண்ணோட்டங்களின் அடிப்படையில் அவற்றையெல்லாம் ஆராய்ந்து அவற்றுள் சிறந்தவற்றை தேர்வு செய்து அதனை பொது சிவில் சட்டமாக எல்லாருக்குமாக இயற்ற வேண்டும்.
பொது சிவில் சட்ட வரைவு ஏதேனும் இருக்கிறதா ?
பொது சிவில் சட்டம் எப்படி இருக்கும் ? இந்துக்களின் மீது மட்டும் தொடர்ந்து இந்து கோட் பில்கள் தொடங்கி தொடர்ந்து போடப்பட்டு வரும் சட்டங்கள் போல இருக்குமா ? இந்துக்கள் மீது மட்டும் மதச்சார்பின்றி போடப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு நிலவுவதால் அவையே பிற மதத்தவர்களுக்கும் நீட்டிக்கப்படுவதே பொது சிவில் சட்டமா ? கோவா மாநிலத்தில் உள்ள பொது சிவில் சட்டம் என்பதை இந்தியா நெடுகிலும் போடப் போகிறார்களா ?
இந்நாட்டிலே சிறந்த வழக்குக்கள் என்றால் யாருடைய வழக்கு ? எத்தகைய வழக்கு ? எவ்வழக்கு எதன் பொருட்டு எடுத்துக் கொள்ளப் படப் போகிறது ? அதன் விவரங்கள் வெளியிடப்பட்டுவிட்டதா ?
பல தசாப்தங்களாக பெரிதாக பேசப்படும் பொது சிவில் சட்டத்திற்கு இவற்றில் எதாவது ஒன்றின் அடிப்படையிலாவது எந்த அரசுத் துறையாவது அமைப்பாவது ஒரு வரைவினை தயாரித்து உள்ளதா ? வேறு யாரேனும் தயாரித்து உள்ளார்களா? அப்படி இல்லையென்றால் எதற்காக பார்வைக்கு வராத ஒன்றுக்கு ஆதரவும் அமல்படுத்தப் போகிறோம் என்ற உறுதிப்பாடும் ?
கொண்டு வரப்பட இருக்கும் எந்தவொரு சட்டத்திற்கும் வரைவுகள் காட்டுகிறார்கள். விவாதிக்கிறார்கள். ஆனால் பொது சிவில் சட்டத்தைச் சுற்றி மட்டும் இவ்வளவு குழப்பம் நிலவுகிற போது எதற்காக ஒரு இந்தியன் இதற்கு ஏன் ஆதரவு தெரிவிக்க வேண்டும் ?