இஸ்லாமிய ஆண்கள் நான்கு பெண்களை திருமணம் செய்து கொள்ள முஸ்லீம் பர்சனல் சட்டம் அனுமதிக்கிறது. இந்து ஆண்கள் இரண்டாவது திருமணம் செய்து கொண்டால் இந்தியன் பீனல் கோட் படி தண்டனை இருக்கிறது. இதனால் இஸ்லாமியர்கள் நிறைய பெண்களை திருமணம் செய்து கொண்டு நிறைய குழந்தைகள் பெற்றெடுத்து எண்ணிக்கையில் அதிகமாகி வருகிறார்கள். எனவே இவற்றை கட்டுப்படுத்த வேண்டும். எனவே பொது சிவில் சட்டம் வேண்டும்.
இந்துக்கள் அதிக அளவில் குழந்தைகள் பெற்றுக் கொள்வதில்லை. ஆனால் இஸ்லாமியர்கள் அதிக அளவில் பிள்ளைகள் பெறுகிறார்கள். அரசு முன்வைக்கும் குடும்பக் கட்டுப்பாடு திட்டங்களை இந்துக்களை மட்டுமே கடைபிடிக்கச் செய்கிறார்கள். எனவே இஸ்லாமியர்களையும் கடைபிடிக்கச் வைக்க பொது சிவில் சட்டம் வேண்டும். இன்னும் சில தலைமுறைகள் இப்படியே கடந்தால் இந்துக்களுடைய ஜனத்தொகையை விட இஸ்லாமியர்கள் ஜனத்தொகை அதிகமாகிவிடும். எனவே அனைவருக்கும் குடும்பப் கட்டுப்பாட்டை சமமாக அமல்படுத்த பொது சிவில் சட்டம் வேண்டும்.
இஸ்லாமிய ஆண்கள் மூன்று முறை தலாக் சொல்லி அவர்களுடைய மனைவியை விவாகரத்து செய்து விடுகிறார்கள். இதனால் இஸ்லாமிய பெண்கள் எண்ணற்றோர் பாதிப்புக்கு ஆளாகிறார்கள். எனவே அவர்களுடைய பாதுகாப்பிற்காக பொது சிவில் சட்டம் வேண்டும்.
திருமண வயது என்று வருகிற போது முஸ்லீம் பெண்கள் வயதுக்கு வந்திருந்தால் போதும் என்று முஸ்லீம் பர்சனல் லா வில் உள்ளது. ஆனால் இந்துக்களை பொருத்த வரை பெண்ணின் திருமண வயது 18 என்று இருக்கிறது. ஒரு நாடு என்றால் அதில் சட்டம் அனைவருக்கும் சமமாக ஒரே சட்டமாக இருக்க வேண்டும். இந்துக்களுக்கு ஒரு விதமாகவும் இஸ்லாமியர்க்கு மறுவிதமாகவும் தற்போது இருக்கிறது. பொது சிவில் சட்டம் ஒன்று தான் இதற்கு தீர்வு.